A thought-provoking message from Shri Bahukutumbi Raghavan, First Chancellor of ICFAI, Former IAS officer and UN Civil Servant, Author and Social Activist.
வரிசையில் கால்கடுக்க நின்றிருந்தீர் வாக்களித்தீர்
பரிசாக இதோ எந்தன் பாராட்டுக்குரித்தானீர்
நாட்டு மன்னரென்றே நாதம் எழுப்புகின்றீர்
நான் கூறும் நல்லுரையை நாளும் மறக்காதீர்
ஓட்டைப் போட்டுவிட்டு ஓட்டாண்டியாகாதீர்
வீட்டினுக்கென்றே பணியாளை அமர்த்திட்டு
பணியாளே பிணியாளாய் மாறுவதைச் சகித்திட்டு
அறிவுரைக்குக் காதடைப்பு அரசே ஓரிருட்டடிப்பு
என்றவொரு நிலைமைக்கு நாட்டையே தள்ளிவிட்டு
உரிமைகள் உடைமைகள் எல்லாமே கோட்டைவிட்டு
மனம்போன போக்கெல்லாம் பணியாளைப் போகவிட்டு
கடிவாளம் பூட்டாத குதிரைபோலேக விட்டு
கண்காணிப்பில்லாக் கழிசடையாய் மாறவிட்டு
ஊழலிலும் ஊதாரித்தனங்களிலும் ஊறவிட்டு
நாதி கெட்டுப் பின்னர் நடுத்தெருவில் நிற்காதீர்
அரைநிமிட வாக்களிப்பு ஐந்தாண்டுத் தத்தளிப்பில்
முடியாதிருக்க நித்தம் முனைப்புடனே செயல் படுவீர்
இனிமெ நடக்கறதுன்பாடு
வாக்களிப்பு முடிஞ்சு போச்சு
கூட்டம் கும்பல் வடிஞ்சு போச்சு
அமளிதுமளி வெடிப் பட்டாசு
தொல்லைலேர்ந்து விடுபட்டாச்சு
நம்ம முன்னே ரெண்டு பாதை
ஒண்ணு கல்லு முள்ளுபாதை
எம்.எல்.ஏ.-ன்னு சொல்லிக்கிட்டு
ஒன்னையும் என்னையும் சல்லிக்கட்டு
காளைபோல மோதி முட்டி
உதைச்சுத் தள்ளி ஓரங்கட்டி
அமைச்சர்னு திமிரைக் காட்டி
நாளும் நம்மைப் போட்டு வாட்டி
கறுப்புப் பூனை கறுப்புப் பணம்
நாற்றம் நாறும் கயவத்தனம்
எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு
இருக்கறது வெக்கங்கெட்டு
இது பண்டைய கோழை வழி
வாழையடி வாழை வழி
உண்டிதற்கு மாற்று வழி
நல்லவங்க போற்றும் வழி
நாட்டுநன்மைக்கேற்ற வழி
துணிஞ்சு செயலாற்ற வழி
நேற்று வரை வாக்காளன் நீ
இன்னிக்கு மக்கள் காப்பாளன் நீ
மக்களாட்சியின் நாயகன் நீ
நேர்மை தூய்மைக்குத் தாயகம் நீ
அரசுனுடைய கொட்டத்துக்கும்
நல்லத்துக்கும் கெட்டத்துக்கும்
வரும் அஞ்சாண்டு மொவ்வொரு கணம்
பொறுப்பு நீதான்னு புரிஞ்சிக்கணும்
அரசு மேலெ வைச்ச கண்ணை
எடுத்தேன்னாக் கவ்வுவெ மண்ணை
சொல்லிட்டேன் முடிஞ்சதென் பாடு
இனிமே நடக்கறதுன் பாடு