Press Release – at the Press Meet on 26th April 2017

நம் உரிமையை அரசியலாரிடமிருந்து மீட்டெடுப்போம்

நாட்டிலுள்ள அரிசியல் நிலைமை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இன்றைய நேர்மையற்ற அரசியல் நமது மூதாதையர்களின் – சுதந்திர வீரர்களின் – கனவான நாட்டை அமைதியும் சுபீக்ஷமும் – தன்னிறைவும் – அடைந்ததாகச் செய்வதையும், அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளான சமபாவம், நல்லிணக்கம், சமூக நீதி, ஆகியவற்றையும் பொய்த்துப்போக வைத்து விட்டது.

முன்னணி அரசியல், ஊழல்வாதிகள், குற்றவாளிகள், வாரிசு அரசியல் வாதிகள், ஜாதி மத வாதிகள் என்ற பேராசைக்காரர்களால் நிறைந்து ஜன நாயகத்தை கேலிக்கூத்தாக்கி வைத்திருக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் நேர்மையற்ற பண முதலைகள், தற்குறிகளுக்குள் ஒருவரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மை தள்ளி விட்டு கொள்ளையர்களும், தொழிலுலக தாதாக்களும் தங்களுக்கு ஊழியம் செய்யக் காத்திருக்கும் அடிமைகளையே, அடியாட்களையே ஏனைய ஆட்சி மன்றங்களுக்கும் நியமித்து வருகிறார்கள்.

பொது வாழ்வில் இந்த மோசமான பிற்போக்குத் தன்மையை முறியடிக்க மக்களை ஆட்சியதிகாரம் பெறச் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் அவர்கள் தங்களுக்குள்ளேயே நேர்மையாளர் ஒருவரை வேட்பாளராக தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்க வேண்டும். உறுப்பினர்களை திரும்பப் பெரும் உரிமையும், மக்கள் ஆதரவை கணிக்கும் உரிமையும் பெற்று பிரதிநிதித்துவ முறை ஆட்சியிலிருந்து பங்கேற்பு முறை ஆட்சியை உருவாக்க வேண்டும்.

மக்களிடையே இன்று ஒரு பெரிய பொறுப்பற்ற தன்மை குடிகொண்டுள்ளது. சராசரி வாக்களர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வாக்களித்து விட்டால் தம் கடமை முடிந்து விட்டதாக எண்ணுகிறார்கள். நாம் தேர்ந்தனுப்பும் பிரதிநிதியை தன் கடமையை சரிவர செய்ய வைக்க வேண்டியதும் நம் கடமையே என்பதை உணருவதில்லை.

நாட்டை ஊழல்வாதிகள், குற்றவாளிகள், வாரிசு அரசியல் வாதிகள் மற்றும் ஜாதிமத வாதிகளிடமிருந்து மீட்டெடுத்து நேர்மையின் ஆட்சியாக, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான அமைதி, வேற்றுமையற்ற சமுக நீதி, சம உரிமைகள் ஆகியவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் முயற்சி இது.

ஒய்வு பெற்ற ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் பல பெரியோரின் வழிகாட்டுதலில் ஒரு ஆர்லர்களின் குழுவாக நாங்கள் இந்த இயக்கத்தை துவக்கியுள்ளோம்.

சில கிராமங்களில் அங்குள்ள வாக்காளர்கள் தங்களுக்குளேயே நேர்மையான ஒருவரை தெரிந்தெடுத்து, வேட்பாளராக நியமித்து, தேர்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த முறையில், உள்ளாட்சி மன்றம், சட்ட மன்றம், நாடாளு மன்றம் அனைத்திற்கும், பிரதிநிதியை தேர்வு செய்யும் விழிப்புணர்ச்சியை உருவாக்க முயன்று வருகிறோம். இதை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

பல தரப்பட்ட ஆர்வலர் குழுக்களும் பல்வேறு இன்னல்களுக்குத் தீர்வு காண்பதில் தீவிரமாக முனைந்திருக்கும் போது, அரசியலை இன்றுள்ள பேரழிவை நோக்கிய பயணத்திலிருந்து மீட்டு தீய அரசியலில் இருந்து தூய அரசிலுக்குப் பயணிக்க அனைத்துக் குழுக்களும் கை கோர்த்து பணிபுரிய வேண்டிய நேரமிது.

இதன் தொடர்ச்சியாக பற்பல ஆர்வலர் இயக்கங்களையும் பங்கேற்கச் செய்ய ஒரு பெறிய கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்ய உள்ளோம்.

நல்லாட்சியையும், நேர்மையையும் விரும்பும் அனைவரும் இதில் பங்கேற்று பாரதத்தை மீண்டும் உன்னத நிலைக்கு அழைத்து செல்ல கை கோர்த்து பணியாற்ற வருமாறு வேண்டுகிறோம்.

People’s Movement for Clean Politics’ இன் சார்பில் இந்த செய்திக் குறிப்பை வெளியிடுபவர்கள்

 

Sd

தேவேந்த்ர ஓஃஜா

(இஆப ஓய்வு, து வே – காந்திக்ராம கிராமீயப் பல்கலை கழகம்)

Sd

கு. ராஜ ராஜன்

(காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு)

Ph No: +91 94441 60839

E mail ID: letsbelldcat@gmail.com

Sd

ராகவன் ஸ்ரீனிவாசன்

(லோக் ராஜ் சங்கதன்)

Ph No: +91 98181 86610

E mail ID: raghavansrin@gmail.com

By admin